நேற்று நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அந்த நிலையில் ஏற்கனவே இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் தோற்றதால் இரண்டாம் டேஸ்ட் உலக கோப்பை தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு சென்றது.
எனவே திருப்பி பதிலடி கொடுக்க இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நன்றாக விளையாடி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் நான்காவது இடத்திலிருந்து மீண்டும் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி சென்றது. குறிப்பாக சொல்லப் போனால் டெஸ்ட் சாம்பியன்சி தரவரிசை பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்கான போட்டி மிக கடுமையாக நிலவி வருகிறது. எனவே இந்த தரவரிசை பொருத்தவரை எந்த இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி செல்லும் என்பது மிகவும் சவாலானது ஒன்றாகவே இருக்கிறது.
தற்போது முதலிடத்தில் ஆஸ்திரேலியா அணியும் மற்றும் இரண்டாவது இடத்தில் இந்திய அணியும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது மட்டுமல்லாமல் முந்தைய டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா அணி மோதி இதில் இந்திய அணி படும் தோல்வியை சந்தித்தது. எனவே இந்த முறையாவது இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு சென்று சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைக்கு இந்திய அணியில் மிடில் ஆடர் நன்றாக இல்லாததால் அதை சரி செய்ய பிசிசிஐ களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சை பொறுத்தவரை அஸ்வின், அக்சர் பட்டேல், ஜடேஜா போன்ற இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் நன்றாகவே வந்து வீசுகின்றனர். மேலும் வேகப்பந்து பொருத்தவரை பும்ரா மட்டும் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக வீசி வருகிறார். எனவே மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வருகிற 2025 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.