இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த நிலையில் முதல் இரண்டு போட்டியில் ஏற்கனவே நடந்த முடிந்த நிலையில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் மற்றும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது. எனவே தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் சரி சம நிலையில் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் இங்கிலாந்து அணியும் கண்டிப்பாக தொடரை கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்ற நிலையில் விளையாடி வருகிறார்கள்.
இதனையும் அவ்வபோது இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் முன்னாள் நியூசிலாந்து தொடக்க அணியின் அதிரடி ஆட்டக்காரரான பிரண்டன் மெக்கல்லம் தொடரை வென்று இந்திய அணியை இந்திய மண்ணில் வீழ்த்துவோம் என்று பேட்டி கொடுத்து வருகிறார். முதல் போட்டியில் நன்றாக விளையாடிய ஜடேஜா மற்றும் கே.எல். ராகுல் இருவரும் காயம் காரணமாக இரண்டாவது போட்டியில் இருந்து நீக்கப்பட்டனர். இருப்பினும் இந்த இரண்டு முக்கிய வீரர்கள் இல்லாமல் இரண்டாவது டெஸ்ட் போட்டியை சிறப்பாக விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது.
இது மட்டுமல்லாமல் முதல் போட்டியில் இருந்து விராட் கோலி அவர்கள் ஆடுவாரா அல்லது ஆடமாட்டாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே வந்து கொண்டிருந்த நிலையில், அதை பிசிசிஐ தற்பொழுது ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் விராட் கோலி அவர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் மூன்றாவது மற்றும் நான்காவது போட்டியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார் என்று பிசிசிஐ கூறியது.
இந்த நிலையில் விராட் கோலி அவர்கள் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது என்றே கூறலாம். இது மட்டும் இல்லாமல் விராட் கோலி அவர்கள் இல்லாத நிலையில் ஏற்கனவே காயத்தால் விலகிய ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் அணிக்கு திரும்ப அதிக வாய்ப்புகள் உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட இந்திய அணியின் வேக பந்துவீச்சாளர் முகமது சிராஜ் அவர்கள் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டு அணிகளுக்கும் மிகவும் சவாலானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தொடரை முழுமையாக வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்களால் கருதப்படுகிறது. எனவே இந்திய அணியும் சொந்த மண்ணில் தொடரை விட்டுக் கொடுக்காமல் சிறப்பாக விளையாடி தொடரை வெல்லும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.