இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அந்த போட்டிகளும் தற்போது நடந்து முடிவடைந்துள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்து உள்ளது.
இந்நிலையில், அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் அணி விவரம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி தேர்வு நாளை நடைபெறும் என்றும், அதன்படி நாளை பிப்ரவரி 6-ம் தேதி 2024 நடைபெறும் என்பது தற்போதைய தகவல் ஒன்று வெளியேயுள்ளது.
அதன்படி அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிக்கு தேர்வு குறித்த முக்கிய விவரம் என்னவென்றால், வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம். அதேநேரம் முகமது சிராஜ் அணிக்கு அவருக்கு பதிலாக திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல விராட் கோலிக்கு என்ன ஆயிற்று என்று கேட்டால், இது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவர்களை கேட்டதற்கு விராட் கோலியிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். எனவே அடுத்த மூன்று டெஸ்டில் விளையாட தயாரா என்பதை தெரிந்து கொள்ளலாம் என ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக முக்கிய நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே நன்றாக விளையாடி வெற்றியை பெற்றது. குறிப்பாக சொல்லப் போனால் கே எல் ராகுல், ரவீந்திர ஜடேஜா போன்ற இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக விலகி இருந்தும் மற்ற வீரர்கள் நன்றாக சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு முதல் வெற்றியைத் தேடித் தந்தனர். குறிப்பாக ஜெய்ஸ்வால் மற்றும் பும்ரா அவர்களின் ஆட்டம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பாக இருந்தது.