இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி 336 ரன்களுடன் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்க, ஜெய்ஸ்வால் அவர்களின் மிகச் சிறந்த அபாரமான ஆட்டத்தால் 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் இருநூற்றி தொண்ணூறு பந்துகளில் இருநூறு ஒன்பது ரன்கள் எடுத்து சாதனை முந்தைய கிரிக்கெட் வீரர்களின் சாதனைகளை முறியடித்து புதிய சாதனையை படைத்தார்.
இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், அகமது, பசீர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து இங்கிலாந்துஅணிக்கு தொடக்க வீரர்களாக ஜாக் கிராலி மற்றும் பென் டக்கட் கூட்டணி களம் இறங்கியது. பும்ரா மற்றும் முகேஷ் குமார் இருவரும் இந்திய தரப்பில் இங்கிலாந்து அடியின் தொடக்க வீரர்களை திணற செய்ய தாக்குதலை தொடங்கினர்.
என்னதான் இந்தியன் பவுலர்கள் நன்றாக பந்துகளை வீசினாலும் பவுண்டரிகள் மூலம் ரன் குவித்த இருவரும் பும்ரா வீசிய ஒரே ஓவரில் நான்கு பவுண்டரிகள் அடித்து அதிர்ச்சி அளித்தனர். இதன்பின், 10 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் குவித்தது. பின்னர் தாக்குப்பிடித்து வந்த இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் முதல் ஓவரிலேயே டக்கெட் விக்கெட்டை வீழ்த்தினார். அரை சதம் அடித்த ஜாக் கிராலி அக்சர் பட்டேல் வீசிய பந்தில் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ரோகித் சர்மா மீண்டும் தாக்குதலுக்கு இந்தியாவின் வேக பந்துவீச்சாளர் பும்ராவை கொண்டு வந்தார், அப்போது ரூட் மற்றும் போப் ஆகிய இங்கிலாந்தின் தடுப்பு சுவர் இருவரும் களத்தில் இருந்தனர். ரோஹித் சர்மா. முதல் ஓவரிலேயே ஸ்விங்கர் அவுட் ஸ்விங்கரில் மாறி மாறி முகேஷ் குமார் மற்றும் உம்ரா இருவரும் பந்து வீசினார். இதைப் பயன்படுத்தி பும்ரா நேராக ஒரு பந்தை வீச, ரூட் பேட்டில் பட்டு நேராக சென்ற பந்து சுப்மானின் கைகளை எட்டியது. இதன் காரணமாக ரூட் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். மீண்டும் பும்ராவின் ஆட்டமிழப்பை ஏற்க முடியாமல், ஜோ ரூட் களத்தில் தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.
பும்ரா மற்றும் ரூட் இருவரும் இருபது இன்னிங்ஸ்களில் ஒருவருக்கொருவர் எதிராக விளையாடியுள்ளனர், அதில் பும்ரா ஜோ ரூட்டை எட்டு முறை விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல் கடந்த போட்டியில் சதம் அடித்த ஒல்லி போப்பிற்கு இன் ஸ்விங் யாக்கர் பும்ரா வீச பந்து ஆஃப் ஸ்டம்பிலிருந்து பறந்தது. இதன் காரணமாக அவரும் 23 சொற்ப ரன்களில் வெளியேறினார்.