நியூசிலாந்து மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் டேரில் மிட்செல் காலில் அடிபட்டதால் அவர் காயம் காரணமாக மீதி இருக்கும் டெஸ்ட் போட்டிகள் மற்றும் டி20 தொடரில் இருந்து ரூல்டு அவுட் ஆகி உள்ளார். தற்போது டெஸ்ட் தொடரை பொறுத்தவரை வில் யங் மாற்றுவீரராக நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல் அவருக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது மட்டும் இல்லாமல் அவர் ஆஸ்திரேலியா அணியுடன் நியூசிலாந்து மோத இருக்கும் மூன்று டி20 போட்டிகள் தொடர்ந்து தொடரிலும் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனவே இந்த காரணத்தால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் பெரும் கவலையில் உள்ளனர்.
ஏனெனில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணியுடன் கடும் போட்டி போட்டு டேரில் மிட்செல் வீரரை 14 கோடிக்கு ஏலம் எடுத்து உள்ளது. எனவே இந்த காயம் காரணமாக டேரில் மிட்செல் அவர்கள் சிஎஸ்கே அணிக்காக ஆடுவாரா அல்லது ஆடமாட்டாரா என்ற சந்தேகம் அவர்களது ரசிகர்களுக்கு இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே வருகிற மார்ச் மாதம் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டேரில் மிட்செலை பார்ப்பது மிகவும் கடினமான ஒன்றே ஆகும். எனவே அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்ந்தெடுக்க சிஎஸ்கே அணியும் முனைப்பு காட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இல்லை என்றால் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் டேரில் மிட்செல் விளையாடுவதே மிகவும் சந்தேகத்திற்கு ஒன்றாகவே உள்ளது.
எனவே சிஎஸ்கே ரசிகர்கள் டேரில் மிட்செல் அவர்கள் சீக்கிரம் குணமாகி சிஎஸ்கே அணிக்காக விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நிலையில் உள்ளனர். ஆனால் இதுவரை சிஎஸ்கே அணியிடமிருந்து டேரில் மிட்செல் தொடர்பாக எந்த வித தகவலும் வரவில்லை. எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை டேரில் மிட்செல் சிஎஸ்கே அணியிலேயே நீடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டேரில் மிட்செல் சிஎஸ்கே அணிக்கு மிடில் ஆர்டரை வலுப்படுத்தக்கூடிய வீரராக இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு துரதிஷ்டவசமாக காயம் ஏற்பட்டுள்ளது, சிஎஸ்கே அணிக்கு எந்தவித தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பதை எதிர் வரும் ஐபிஎல் சீசனில் தான் பார்க்க முடியும்.
அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே தல தோனிக்கு காலில் காயம் ஏற்பட்டு இருந்த நிலையில், இப்போது டேரில் மிட்செலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தல தோனி காயத்திலிருந்து விலகி இப்போது வலை பயிற்சியில் ஈடுபட்டு வந்து கொண்டிருக்கிறார்.