வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் வீரர் சமர் ஜோசப் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக பந்து வீசி அசத்தியிலிருந்து ஐபிஎல் டீம்ஸ்களின் எல்லா கவனமும் மற்றும் பார்வையும் அவரை நோக்கி தான் இப்போது இருக்கிறது. அவரை எப்படியாவது மாற்று ரீபிளேஸ்மென்ட் வீரராக எடுக்க வேண்டும் என்றவொரு குறிக்கோளோடு அனைத்து அணிகளும் அவரை எடுக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக சொன்னால் இந்த வருடத்தில் ஆர்.சி.பி அணியில் சிராஜை தவிர எந்தவொரு பௌலரும் அந்த அளவிற்கு சிறப்பாக இல்லாத நிலையில் அந்த அணியானது டாம் கரனுக்கு பதிலாக மாற்றுவொரு வீரராக சமர்ஜோசப்பை எடுக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று பேச்சு சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் டாம் கரன் அவர்கள் தற்பொழுது காயம் ஆகியுள்ளார். எனவே அவர் எப்போது சரி ஆவார் மற்றும் ஐபிஎல் விளையாடுவாரா என்றவொரு எந்த வித அப்டேட்டும் ஆர்.சி.பி அணியிடம் இருந்து இதுவரை வரவில்லை.
இந்த நிலையில் ஒரு பக்கம் கிரிக்கெட் வல்லுனர்கள் மூன்று அணிகள் சமனர் ஜோசப்பை ரீபிளேஸ்மென்ட் வீரராக எடுக்க அவரை அணுகலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். அந்த நிலையில் ஏற்கனவே ஐபிஎல் ஏலத்தில் சமனர் ஜோசப்பை அடிப்படை விலையிலேயே எடுக்க கிரிக்கெட் வல்லுனர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் எந்த அணியும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் அவரை ஐபிஎல் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.
பிறகு சமனர் ஜோசப் வீரரின் பவுலிங் திறமையை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அனைவரும் பார்த்தனர். அந்த நிலையில் தற்போது ஒரு சில ஐபிஎல் அணிகள் சமனர் ஜோசப் ரீபிளேஸ்மென்ட் வீரராக கூட கிடைக்காமல் போய்விட்டார் என்று புலம்பி கொண்டிருக்கின்றனர். எனவே தற்போது சமர் ஜோசப்பை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது 3 கோடி அடிப்படை விலை கொடுத்து அவரை அணியில் இணைத்திருக்கிறார்கள் என்பதே நிதர்சமான உண்மை. மார்க் வுட் அவர்களின் அதிக வேலை பளு காரணமாக ஐபிஎல் விளையாட வேண்டாம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அவருக்கு தெரிவித்துள்ளது.
எனவே தன் மீது நம்பிக்கை வைத்திருந்தால் எதையும் குறுகிய காலம் மற்றும் நேரத்தில் சாதிக்கலாம் என்பதற்கு சமர் ஜோசப் உடைய வாழ்க்கை வரலாறு மிகச் சிறந்த உதாரணம் என்பதே உண்மை. எனவே ஆர்.சி.பி அணி தான் அவரை எடுக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருக்கிறது என்று கூறலாம்.