வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் மற்றும் இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி. எனவே கடைசி போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது ஆஸ்திரேலியா அணியுடன் பல பரிட்சை நடத்தியது.
இந்த போட்டியானது ஆஸ்திரேலியாவில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாசை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் கடந்த இரண்டு போட்டிகளிலுமே வெஸ்ட் இண்டீஸ் அணியானது டாசை வென்று இருந்தது. முதல் இரண்டு போட்டியிலுமே வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கேப்டன் ரோவ்மேன் பவல் பந்துவீச்சை தேர்ந்தெடுத்திருந்தார். இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டியில் டாசை வென்ற கேப்டன் ரோவ்மேன் பவல் தொடரை ஏற்கனவே இழந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு கடும் சவாலை கொடுக்கலாம் என்று எண்ணி பேட்டிங்கை செய்ய தீர்மானித்தார்.
எனவே பேட்டிங்கிற்கு வருகை தந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் அந்த அளவிற்கு பெரிய ரன்களை அடிக்க முடியாமல் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த பூரன், சேஸ், பவல் ஆகிய மூவரும் அதிகபட்சமாக ரன்களை அடிக்க எடுக்க முடியாமல் அவுட் ஆகி சென்றனர். பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரூதர்போர்டு மற்றும் ஆன்ட்ரே ரசல் ஆகிய இருவரும் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சுகளை பறக்க விட்டனர்.
இந்த நிலையில் ரூதர்போர்டு 40 பந்துகளில் 67 ரன்களை அடித்து அணிக்கு தேவையான ரண்களை மெதுவாக அடித்தார். இவர் 5 ஃபோர்கள் மற்றும் 5 சிக்ஸர்களை அடித்தார். அதே சமயத்தில் ஆன்ட்ரே ரசல் 29 பந்துகளில் 71 ரன்கள் 4 ஃபோர்கள் மற்றும் ஏழு சிக்ஸர்களை அடித்து நொறுக்கினார். அப்போதே அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 244.83 ஆக இருந்தது. அவருடைய ஸ்ட்ரைக் ரேட்டிலிருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம் ஆன்ட்ரே ரசல் எப்படி ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சுகளை பறக்க விட்டார் என்பதை.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 7 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்களை குறித்தது. பின்னர் 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று கடுமையான இலக்கை அடைய களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஜோஸ் இங்கிலீஷ் ஆகிய இருவரும் களத்திற்கு வந்தனர். இதில் ஜோஸ் இங்கிலீஷ் அவுட் ஆகி செல்ல, டேவிட் வார்னர் மற்றும் களத்தில் நின்று தனியாக ஆடி கொண்டிருந்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஜோஸ் இங்கிலீஷ் வந்த வரிசையில் அவுட் ஆகி கொண்டே சென்று நடையை காட்டினர். பின்னர் டேவிட் வார்னர் சேஸ் ஓவரில் 49 பந்துகளில் 81 ரன்கள் 9 ஃபோர்கள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடித்த நிலையில் அவுட் ஆகி சென்றார்.
இறுதியில் டிம் டேவிட் 19 பந்துகளில் 41 ரன்களை அடித்து அதிரடி காட்டி அணிக்கு தேவையான ரன்களை உயர்த்திக் கொண்டே சென்றார். இருப்பினும் 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா வானியல் இலக்கை அடிக்க முடியாமல் போனது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா வெளியானது 183 ரன்களை மட்டுமே அடித்து 5 விட்டுகளை இழந்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
மேலும் படிக்க: பல ஆண்டு ஏக்கம்: 3வது டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் அறிமுகம்…
வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேஸ் மற்றும் ஆகிய ரொமாரியோ செப்பர்ட் தலா இரண்டு விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தி இருந்தனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது. இருப்பினும் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை தான் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 போட்டிகளில் மீண்டும் வருகிறது என்பதை இந்த போட்டி நம் அனைவருக்கும் உணர்த்தும் என்ற அளவில் தான் அமைந்திருக்கிறது.