இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரிட்ச்சை செய்ய போகும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற இருக்கும் பட்சத்தில் கடந்த இரண்டு டெஸ்ட் போட்டி நடைபெற்ற ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினம் மைதானத்தை விட இந்த ராஜ்கோட் மைதானமானது சாதகமாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்களால் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் 11 ஆனது என்னவாக இருக்கும் என்று பார்க்கையில் பேட்டிங் பொறுத்தவரை ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் அதிரடி வீரர்கள் தான்.
பின்னர் நான்காவது இடத்தில் ரஜத் படிதார் களம் இறங்க வாய்ப்புகள் இருக்கலாம். அதேபோல் கே.எல்.ராகுல் இல்லாததால் சர்பராஸ் கான் அல்லது தேவ்தத் படிக்கல் யாராவது ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக சர்பராஸ் கானுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவிற்காக முதல் முறையாக சர்பராஸ் கான் களம் இறங்குவார். ஏனென்றால் படிக்கலுக்கு முன்பதாகவே சர்பராஸ் கான் அணியில் இணைந்து விட்டார். எனவே அவருக்கு வாய்ப்பு கொடுக்காவிட்டால் அது நியாயமாக இருக்காது.
மேலும் இப்போது வாய்ப்பு இல்லை என்றால் சர்பராஸ் கானுக்கு இனிமேல் வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. மேலும் பரத் இல்லாமல் துரு ஜூரலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எனவே சர்பராஸ் கான் மற்றும் துரு ஜூரல் என இரண்டு அறிமுகேர்கள் இந்தியாவிற்காக களம் இறங்குவார்கள் என்று கணிக்கப்படுகிறது. மேலும் பந்து வீச்சை பொறுத்தவரை ஜடேஜா தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். எனவே அவர் விளையாடும் அளவில் உடல் தகுதியோடு இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ராஜ்கோட் அவருடைய ஹோம் மைதானம் என்பதால் நிச்சயமாக விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். எனவே அஸ்வின் ஜோடியை மீண்டும் பார்க்கலாம். மேலும் வேக பந்துவீச்சை பொறுத்தவரை பும்ரா மற்றும் சிராஜ் இடம் பெறலாம். ஆனால் மைதானமானது அதிக அளவில் ஸ்பின் பௌலிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படும் பட்சத்தில், ஸ்பின் பௌலிங்கில் நிறைய மாறுபாடுகள் காட்டும் குல்தீப் யாதவை எடுக்கவில்லை என்றால் அது அணிக்கு பின்னடைவாக அமையலாம்.
இந்தியா வெற்றியை எதிர்பார்த்து தைரியமான முடிவுகளை எடுக்க நினைத்தால் குல்தீப் யாதவை கொண்டு வரலாம். அதாவது நான்கு ஸ்பின்னர்களோடு களமிறங்கலாம். எனவே இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி என்னவாக இருக்கும் என்று பார்க்கையில், ரோஹித் ஷர்மா (C), ஜெய்ஸ்வால், கில், சர்பராஸ் கான், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ரவி அஸ்வின், ஜஸ்ப்ரீத் பும்ரா (VC), முகமது சிராஜ் போன்ற பையர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருக்கிறது.