ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்கள் முடிந்த நிலையில் தற்போது டி20 சீரிஸில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டி முடிந்த நிலையில்அதில் இரண்டும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. இந்த இரண்டாவது போட்டியை பார்த்தோம் என்றால், க்ளென் மேக்ஸ்வெல் ஒரு அபாரமான இன்னிங்ஸ்சை ஆடி சதம் விளாசினார். இதன் மூலம் ட் டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைவான இன்னிங்ஸ்களில் அதிக சதம் விளாசிய முதல் பிளேயராக சாதனை படைத்துள்ளார்.
மேலும் இந்த போட்டியில் நடந்த ஒரு முக்கியமான சுவரசியமான விஷயம் என்னவென்றால், அதாவது வெஸ்ட் இண்டீஸ் அணி சேசிங் செய்து வந்த போது 19வது ஓவரின் ஜேசன் ஹோல்டர் ரன் அவுட் செய்யப்பட்டார். ஸ்பென்சர் ஜான்சன் வீசிய பந்தை எதிர்கொண்ட அல்சரி ஜோசப் கவர் பக்கம் பந்தை அடித்துவிட்டு ரன் எடுக்க ஓடினார். இந்நிலையில் பந்து ரன் அவுட் செய்ய ஏறிய செய்யப்பட்ட பட்சத்தில் அல்சரி ஜோசப் கிரீஸை நெருங்குகிறாரா என்பதை கவனிக்காத ஸ்பென்சர் ஜான்சன் இந்த பக்கம் திரும்பிய படி பந்தை ஸ்டம்பில் அடித்துவிட்டு எதுவுமே நடக்காதது போல் சென்றார்.
ஆனால் இந்த நிகழ்வை நன்றாக கவனித்த நடுவர் அதை ரிவ்யூ செய்து பார்த்தபோது அது தெளிவாக அவுட் என தெரியவந்தது. எனவே இது அவுட் ஆன தெரிந்ததும் ஆஸ்திரேலியா வீரர்கள் சந்தோசத்தில் சத்தம் போட அப்போது நடுவர் அவுட் இல்லை என்று முடிவு அளித்தார். அதாவது. இது அவுட்டாக இருந்தாலும் இந்த ரன் அவுட் செய்யப்பட்டபோது யாருமே அப்பீல் கேட்கவில்லை என நடுவர் கூற அப்போது நான் அப்பீல் கேட்டேன் என்று டிம் டேவிட் முன்னால் வந்தார்.
ஆனால் டிம் டேவிட் சத்தமாக அப்பீல் கேட்டு இருக்க வேண்டும், எனவே இப்போது அவுட் தர முடியாது என நடுவர் கூறினார். ஆஸ்திரேலியா அணி வீரர்கள் யாருமே அப்பீல் கேட்கவில்லை எனவே அதற்கு நடுவர் அவுட் தர மறுத்துவிட்டார் என்பது சரியா தவறா என்று தெரியவில்லை. இந்த நிலையில் இந்த நிகழ்வானது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு அரிதான நிகழ்வாக பேசப்படும். மேலும் டி20 உலககோப்பை வரும் பட்சத்தில் இந்த சம்பவமானது எல்லா அணிகளுக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.