ரோஹித் சர்மா அவர்கள் கூறியது எனக்கு ,மிகவும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அதுவும் வந்து நம் ஆசியன் கண்டத்திலிருந்து இன்னொரு ஒருத்தர் வந்து இரட்டை சதம் அடித்திருப்பதை பார்க்கும்போது கிரிக்கெட் நல்ல ஒரு எதிர்காலத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது என்று கூறி உள்ளார். இந்த மாதிரி வந்து இளம் வீரர்கள் அடுத்த அடுத்து வரக்கூடிய வீரர்கள் சாதனைகளை வந்து உடைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
அப்போது தான் கிரிக்கெட் தொடர்ந்து பார்த்தீர்கள் என்றால் ஆக்ட்டிவாகவே இருக்கும் என்று ஹிட்மேன் ரோஹித் சர்மா வந்து சொல்லியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இலங்கை வீரர் ஒருவர் வந்தும் பாராட்டி பேசியிருக்கிறார். இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி தொடரில் முதல் ODI போட்டியில் பார்த்தீர்கள் என்றால் ஆஃப்கானிஸ்தான் அணியை போட்டு புரட்டி எடுத்துவிட்டார் இலங்கை பேட்ஸ்மேன் பதும் நிசங்க துவக்கத்தில் களம் இறங்கி எல்லா பந்துகளையும் பிரித்து மேய்ந்துவிட்டார்.
இவரும் அவிஷ்கா பெர்னாண்டோ இவர்கள் இரண்டு பேரும் வந்து சிறப்பாக பார்ட்னர்ஷிப் போட்டு ஆடி 182 ரன்கள் அடித்தார்கள். அவிஷ்கா பெர்னாண்டோ 88 ரன்கள் அடித்து சதம் அடிக்காமல் விக்கெட்டை இருந்தாலுமே கூட இன்னொரு பக்கம் வந்து பதும் நிசங்க கடைசி வரைக்கும் ஆடி விக்கெட்டை இழக்காமல் 210 அடித்தார். அதாவது 179 பந்தில் 210 ரன்களில் இருபது ஃபோர்கள் எட்டு சிக்ஸர்களை பறக்கவிட்டிருப்பார்.
151.08 ஸ்ட்ரைக் ரேட் ஓட அவர் அடித்து ஆடி அணிக்கு ஒரு நல்ல இலக்கை சேர்த்தார். ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை வீரர் வந்து ஒரு இரட்டை சாதம் போடுவது அப்படி என்றால் வந்து இப்போது தான் முதல் முறையாக வந்து நடக்கின்றது. இதற்கு முன்னால் ஜெயசூர்யாவே பார்த்தீர்கள் என்றால் இந்த போட்டியை வந்து பார்த்துக்கொண்டு இருந்து விட்டு ரொம்பவே நிசங்காவை உற்சாகப்படுத்தி இருப்பார்.
நிசாங்கா அடித்த இந்த இரட்டை சதத்தை பார்த்து ரோஹித் சர்மா ஒரு வீடியோ பதிவில் பாராட்டி உள்ளார். ரோஹித் ஏன் இதை பற்றி பேச வேண்டும் என்றால் அவர் ஒரு இரட்டை சத நாயகன் என்பது நம் அணைவருக்கும் தெரிந்த ஒன்றே. அவர் வந்து வீடியோ பதிவில் என்ன சொல்லியிருக்கிறார் என்றால் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. இளம் வீரர்கள் இந்த மாதிரி தொடர்ந்து சிறப்பாக ஆடவேண்டும். நம்கண்டத்தில் இருந்து இன்னொரு வீரர் இரட்டை சதம் போட்டது எனக்கு ஒரு இரட்டை ட்ரீட் ஆக வந்து அமைந்திருக்கிறது. இதே மாதிரி பல சாதனைகளை கிரிக்கெட்டில் பல இளம் வீரர்கள் வந்து தொடர்ந்து பண்ணிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் கிரிக்கெட் ஆக்டிவாகவே இருக்கும் அப்படி என்கிற மாதிரி ஹிட்மேன் ரோஹித் நிசங்கா போட்ட உடனே வந்து பாராட்டி பேசியிருக்கிறார்.