இரண்டாவது குழந்தைக்கு பெயர் சூட்டிய விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா

Author:
Virat Kohli and Anushka Sharma Welcome Second Child
Virat Kohli and Anushka Sharma Welcome Second Child

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்தொடரை தவறவிட்ட இந்தியாவின் விராட் கோலி அப்படி எதற்காக ஓய்விலிருந்து வருகிறார் என்று சமூக வலைதளங்களில் கேள்விகளாக கேட்கப்பட்டு வந்த நிலையில், தற்போது விராட் கோலியே அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வெளியிட்ட கிங் விராட் கோலி தனக்கு இரண்டாவதாக குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி அந்த பதிவில் அவர் கூறியிருப்பது என்னவென்றால், மிக மகிழ்ச்சியான தருணம் மனம் முழுவதும் நிறைந்த அன்புடன் எங்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்து என தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் எங்கள் குழந்தை வாமிகாவுக்கு தம்பி பிறந்து உள்ளார், அக்காய் என்ற பெயருடன் அவரை இந்த உலகிற்கு வரவேற்கிறோம். மேலும் மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் அன்பு மற்றும் வாழ்த்துக்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்களுடைய தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பு கொடுத்து அதை புரிந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கோலியின் இந்த செய்தியால் கோலி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அதாவது புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பது போல, இந்திய கிரிக்கெட்டின் எல்லா காலத்திலும் மிகச்சிறந்த பிளேயரான கோலிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கும் பட்சத்தில் ஜூனியர் விராட் கோலியை எதிர்காலத்தில் கிரிக்கெட்டில் பார்க்க ஆவலாக உள்ளோம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும், கோலி தனது தனிப்பட்ட விஷயங்களுக்கு ரசிகர்கள் மதிப்பு கொடுத்து அதிலிருந்து விலகியிருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். ஆனால், சமீபத்தில் யூடியூப் நேரலையில் பேசிய தென்னாப்பிரிக்கா ஏ.பி. டிவில்லியர்ஸ் அவர்கள் கூறியது என்னவென்றால், கோலி மற்றும் அனுஷ்கா இருவரும் தங்கள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்திருப்பதாக வெளிப்படையாக கூறி இருந்தார். ஆனால், பின்னர் கோலியின் தனிப்பட்ட விஷயங்களை பேசிவிட்டோமே என்று புரிந்துகொண்டு, நான் சொன்னது அனைத்தும் தவறு என பின்வாங்கினார் ஏ.பி. டிவில்லியர்ஸ். ஆனால், கோலி தற்போது வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஏ.பி.டிவில்லியர்ஸ் தவறு என சொன்னதுதான் தவறு என்று புரிகிறது.

மேலும் இந்த காரணதிற்காக தான் விராட் கோலி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் விளையாடாமல் விலகினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *