ஐபிஎல் 2024 தொடருக்கான அட்டவணை விவரங்களை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஐபிஎல் சீசன் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. குறிப்பாக தேர்தல் காரணமாக மார்ச் 22லிருந்து ஏப்ரல் 7ஆம் தேதி வரை அதாவது 15 நாட்களுக்கான அட்டவணை மட்டுமே வெளியாகியுள்ளது. இந்த 15 நாட்களில் 21 போட்டிகள் அடங்கும். மேலும், முழு அட்டவணை விவரங்கள் மார்ச் மாதம் 2 அல்லது 3வது வாரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது வெளியிட்டுள்ள ஐபிஎல் அட்டவணையை பார்த்தோம் என்றால், முதல் போட்டி மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறவுள்ளது என்றும், இதில் சிஎஸ்கே அணியுடன் ஆர்சிபி அணி மோதவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மோதுமா அல்லது ஆர்சிபி அணியா என்று பேச்சுக்கள் சென்றது. ஆனால் இப்போது அதிகாரபூர்வமாக ஆர்சிபி உடன் மோதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த இரு அணிகளும் ஐபிஎல் நேருக்கு நேர் மோதியதில் சிஎஸ்கே ஆர்சிபி அணியை விட இரண்டு மடங்கு வெற்றி பெற்றுள்ளது.
வருடாவருடம் இந்தமுறை கப்பு எங்களுக்குத்தான் என்று சொல்லிவரும் ஆர்சிபி ஒரு சில போட்டிகளில் கடினம் கொடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். ஆனால் இந்த முறை ஒரு ஆயுதமே இல்லாத நிராயுதபாணியாக விளையாடும். அதாவது ஆர்சிபி அணியின் பந்து வீச்சானது அந்த அளவில் மோசமாக உள்ளது. ஆனால் சிஎஸ்கே மற்றும் எம்ஐ மோதலுக்குப் பிறகு சிஎஸ்கேஸ் ஆர்சிபி மோதும் போட்டியைப் பார்க்க நன்றாக இருக்கும். எனவே முதல் போட்டியே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பாக கேப்டன் தோனி.
தோனியாக லாங் ஹேர் உடன் ஐபில் தொடரில் என்ட்ரி கொடுப்பார். மேலும் இந்த முதல் போட்டி குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை வெளியிட்டுள்ள பஃப் டியூ பிளசிஸ் முதல் போட்டியை உடனான தனது ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். பின்னர் மார்ச் 23 தேதி சனிக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடக்கும் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே. இதில் முதல் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மொகாலியில் மோத உள்ளது. இந்த போட்டியில் டெல்லியில் ரிஷப் பண்டின் கம்பேக்கை பார்க்கலாம். மேலும் அடுத்த போட்டியாக கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் கொல்கத்தா மைதானத்தில் மோத உள்ளது. இதில் கொல்கத்தா அணியானது ஐபிஎல் ஆடத்தில் வரலாறு காணாத விலை கொடுத்து மிட்ச்சல் ஸ்டார்க்கை வாங்கியது. அதேபோல் ஹைதராபாத் அணி பேட் கம்மின்ஸை வாங்கியது. இதில் ஸ்டார்க் பல வருடங்கள் கழித்து ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்க போகிறார். எனவே அவர் எப்படி விளையாடுவார் என்று பார்க்கவே நன்றாக இருக்கும்.
பின்னர் மார்ச் இருபத்து நான்கு ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீண்டும் இரண்டு போட்டிகளை பார்க்கலாம். அதன்படி முதல் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் ஜெய்ப்பூரில் மோத உள்ளது. அணியை பொறுத்தவரை ராகுல் ஒரு மிடில் ஆடர் பேட்டராக விக்கெட் கீப்பராக செயல்படுவார் என கூறப்படுகிறது. அதேபோல சமர் ஜோசப் என்ன செய்வார் என்று பார்க்க வேண்டும். பின்னர் அடுத்த போட்டி குஜராத் மற்றும் மும்பை போட்டி அகமதாபாத்தில் மோத உள்ளது. இந்த போட்டிக்கு தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அது ஏனென்று எல்லோருக்குமே தெரியும்.