இந்திய அணியின் பிரபல வீரர் மனோஜ் திவாரி, தற்போது ரஞ்சி டிராபி போட்டிகளில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது 38 வயதில் இருக்கும் மனோஜ் திவாரி, இப்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை டோர்ன்மென்டோடு டொமெஸ்டிக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். பெங்கால் கிரிக்கெட் அணிக்காக அவர் 19 ஆண்டுகளாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் விளையாடிய சர்வதேச போட்டிகளை பார்த்தோம் என்றால், 12 ஒரு நாள் போட்டிகள் மூன்று T20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். இந்நிலையில், தற்போது டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ஓய்வு பெறப்போகும் மனோஜ் திவாரி வெளிப்படையாக சில விஷயங்களை பேசி வருகிறார். சமீபத்தில் ரஞ்சி டிராபி டோர்னமெண்ட் சரியில்லை. இந்திய கிரிக்கெட்டின் மதிப்புமிக்க டோர்னமெண்டான மதிப்பு, இதை அடுத்த ஆண்டிலிருந்து நடத்த வேண்டாம் என்று பேசினார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் கவனிக்கத்தக்க வகையில் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தனக்கு அப்போது வாய்ப்பு தரவில்லை. அது ஏன் தரவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது அவர் பேசியது என்னவென்றால், எம்.எஸ்.தோனியிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், 2011 ஆம் ஆண்டு டிசம்பரில் சென்னை சேப்பாக்கில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஒரு நாள் சீரிஸில் விளையாடிய போது, அந்தப் போட்டியில் நான் சதம் அடித்தேன். ஆனால், அப்படியிருந்தும் பின்னர் பிளேயிங் லெவனிலிருந்து தவிர்க்கப்பட்டேன் ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி போல, கிரிக்கெட்டின் ஹீரோவாக வரும் அளவிற்கு என்னிடம் திறமை இருந்தது. இன்று நிறைய பிளேயர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கிறது. எனக்கு வருத்தமாக உள்ளதென மனோஜ் திவாரி பேசியுள்ளார்.
ஆனால் அந்த வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் சீரிஸில் சேவாக் தான் கேப்டனாக இருந்தார். குறிப்பாக மனோஜ் திவாரி சதமடித்த அந்த கடைசி போட்டியில் கவுதம் கம்பீர் கேப்டனாக செயல்பட்டார். எனினும் பின்னர் மனோஜ் திவாரிக்கு வாய்ப்பு தரவில்லையா என்று கேட்டால், 2015ஆம் ஆண்டு இந்தியா ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடியபோது, மனோஜ் திவாரிக்கு அந்த சீரிஸில் வாய்ப்பு கிடைத்தது. மூன்று போட்டி கொண்ட ஒரு நாள் சீரிஸில் மூன்றிலுமே விளையாடி முப்பத்து நான்கு ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடதக்கது.