இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டி கொண்ட சீரீஸில் விளையாடிவரும் நிலையில், இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகள் நடந்ததில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. எனவே நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தொடரை வெல்லுமா அல்லது இங்கிலாந்து தொடரை இழுத்துப் பிடிக்குமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில், தற்போது வெளியான தகவலின் படி வருகிற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் 11 பேர் விளையாடும் லெவனில் ஒரு சில மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது காயம் காரணமாக இரண்டு மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை தவறவிட்ட கே.எல்.ராகுல், தற்போது நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட முழு உடல் தகுதியுடன் தயாராக உள்ளார். டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என கே.எல். ராகுல் மீண்டும் கம்பேக் கொடுக்கும் பட்சத்தில் தற்போது அணியில் ரஜத் மட்டுமே தடுமாறி வருகிறார். எனவே அவர் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டு கே எல். ராகுல் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பும்ராவுக்கு இந்த போட்டியிலிருந்து ஓய்வு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே அவருக்கு பதிலாக முகேஷ் குமார் அல்லது ஆகாஷ் தீப்புக்கு வாய்ப்பு கிடைக்கலாம். கடைசி மூன்று டெஸ்ட் போட்டிக்கான அணியில் முகேஷ் குமார் இடம்பெற்றாலும் கூட மூன்றாவது டெஸ்ட் போட்டியின் பொழுது அவர் ஸ்குவாடில் நீக்கம் செய்தனர். இந்த தொடரில் ஒரு போட்டியில் விளையாட பிசிசியால் அறிவுறுத்தப்பட்டார். அதன்படி விளையாடிய முகேஷ் குமார், முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி மொத்தமாக பத்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனவே முகேஷ் குமாருக்கு நான்காவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, இந்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை ஒரு கண்ணோட்டம், பார்க்கையில், ரோஹித் ஷர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கே.எல்.ராகுல், சர்ஃபராஸ்கான், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, ரவி அஷ்வின், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார் போன்ற வீரர்கள் தேர்வு செய்யப்படலாம்.