கிரிக்கெட் உலகமே உற்று நோக்கும் வகையில் ஒரு நாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் சில முக்கியமான மாற்றங்கள் ஃபார்மாட்களில் ஏற்பட்டுள்ளது.
அதாவது ஆப்கானிஸ்தான் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நிலையில், இதில் மூன்று ஒருநாள் போட்டி கொண்ட சீரிஸில் விளையாடிய பட்சத்தில் தற்போது ஐசிசி ஆனது ஒரு நாள் கிரிக்கெட் விளையாட்டிற்கான தரவரிசைப் பட்டியலை அப்டேட் செய்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கடந்த பல ஆண்டுகளாக நீடித்த நாட்களாக பட்டியலை பார்த்தால் ஆல்ரவுண்டர் வரிசையில் பங்களாதேஷ் ஆல்ரவுண்டர் சஹிப் அல் ஹாசனின் பெயர் தான் இடம் பெற்றிருக்கும்.
அந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து இப்போது வரை அதாவது 1739 நாட்களாக பங்களாதேஷ் ஆல்ரவுண்டர் சஹிப் அல் ஹாசன் தான் நம்பர் 1 இடத்தில் இருந்து நீடித்து இருந்தார். ஆனால் இப்போது அப்டேட் செய்யப்பட்ட தரவரிசை பட்டியலில் பங்களாதேஷ் வீரர் சஹிப் அல் ஹாசனை பின்னாடி தள்ளி ஆப்கானிஸ்தான் ஆல் ரவுண்டர் முகமது நபி இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரின் முதல் போட்டியில் முகமது நபி 136 ரன்கள் என ஒரு தரமான ஆட்டம் ஆடி சதம் விளாசினார். தற்போது 39 வயதில் இருக்கும் முகமது நபி ஒரு நாள் போட்டிகளில் ஒரு ஆல் ரவுண்டராக பேட்டிங்கில் 3333 ரன்கள் அடித்தும், பந்து வீச்சில் 163 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த முகமது நபி 314 புள்ளிகள் எடுத்து முதல் இடத்திலும், பங்களாதேஷை சஹிப் ல் ஹாசன் 310 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடத்திலும், ஜிம்பாப்வே நாட்டை சார்ந்த சிக்கந்தர் ராசா 288 ரன்கள் எடுத்து மூன்றாம் இடத்திலும், ஆப்கானிஸ்தானைச் சார்ந்த ரசித் கான் 255 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்திலும், பப்புவா நியூ கினியா நாட்டைச் சேர்ந்த ஆசத் வாலா 248 புள்ளிகளை எடுத்து ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.
முதல் ஐந்து இடங்களில் இரண்டு ஆப்கானிஸ்தான் வீரர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ரவீந்திர ஜடேஜா 209 புள்ளிகளை எடுத்து பத்தாம் இடத்தில் உள்ளார்.