3வது டெஸ்ட் போட்டியில் பேஸ்பால் ஆட்டம் ஆடும் இந்திய அணி வீரர்கள்

Ind vs Eng 3rd Test India Playing Bazball Cricket
Ind vs Eng 3rd Test India Playing Bazball Cricket

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி விளையாடி வரும் ஐந்து டெஸ்ட் போட்டி கொண்ட சீரிஸில் தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஜெய்ஸ்வால் மிக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் ஆசினார். அதே போல் முதல் இன்னிங்சில் ரோஹித் ஷர்மா அதிரடியான ஆட்டம் விளையாடினார். குறிப்பாக இந்த சீரிஸில் இதுவரை பார்த்தோம் என்றால் இங்கிலாந்து அட்டாக்கிங் கிரிக்கெட் என்ற முறையில் பேஸ்பால் ஆடுவதை விட இந்தியா ஒரு படி மேலே சென்று பேஸ்பால் ஆட்டம் ஆடுகிறது என்றே கூறலாம்.

இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்ட முடிவிற்கு பிறகு பேசிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கட், இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாராக ஜெய்ஸ்வால் தயாராகி வருகிறார். அவர் விளையாடும் விதத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அந்த பெருமை முழுவதும் அவரையே சேரும். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல வேண்டுமென்றால் இன்று எதிர் அணி பேட்டர்களும் ஆக்ரோஷமாக பேட்டிங் ஆடுவது வியக்க வைக்கிறது.

அதற்கு நாங்கள் தான் காரணம் அந்த பெருமையை எங்களால் எடுத்துக் கொள்ள முடியும் என்று பென் டக்கட் கூறியுள்ளார். அதாவது இன்று அட்டாக்கிங் கிரிக்கெட் யார் வேண்டுமானாலும் ஆடலாம். ஆனால் அதை ஆரம்பித்து வைத்தது நாங்கள் தான் என்பது போல பென் டக்கட் கூறியுள்ளார். என்னதான் இங்கிலாந்து அணி வீரர்கள் அதிரடி ஆட்டதை ஆடினாலும், ஒரு சில வீரர்கள் மட்டுமே குறிப்பாக விளையாடுகின்றனர். ஆனால் இந்தியா அணியில் அப்பிடி இல்லமால் ஒருவர் அடிக்காமல் போய் விட்டாலும், அடுத்து வரும் வீரர் சிறப்பாக ஆடுகிறார்.

அதிலும் குறிப்பாக ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் போன்ற வீரர்கள் சிறப்பாக அதிரடியாக ஆடுகின்றனர். இங்கிலாந்து அணியில் ரூட், ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ போன்ற வீரர்கள் இன்னும் அந்த அளவுக்கு இந்த தொடரில் செய்யவில்லை என்பதே நிதர்சமான உண்மை. இதுவே இங்கிலாந்து அணியின் பின்னடைவைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

Leave a Comment