3-வது டெஸ்ட் போட்டியின் பாதியிலிருந்து ரவிச்சந்திரன் அஷ்வின் விலகல்

Author:
Ravi Ashwin Left Ind vs Eng 3rd Test
Ravi Ashwin Left Ind vs Eng 3rd Test

என்னடா இது இந்தியாவுக்கு வந்த மிகப்பெரிய சோதனை?, மீண்டும் ஒருவர் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிக்கு இடையே நடை பெற்று கொண்டிருக்கும் 3-வது டெஸ்ட் போட்டியிலிருந்து அஸ்வின் விலகல். இந்த டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருக்கும் பட்ச்சதில் 2-வது நாள் முடிந்த நிலையில் ஒரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அது இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ரவி அஷ்வின் விலகிவிட்டார். இதனால் இது இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கலாம். ஏனென்றால் ஏற்கனவே பென் டக்கட் பேஸ் பால் பேட்டிங்கில் மிரட்டி வருவதால், இந்த போட்டியானது இந்தியாவிற்கு மிகவும் கடினமாக அமையலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இது போதாக் குறைக்கு அஸ்வினும் இந்த டெஸ்ட் போட்டியிலிருந்து விலகி விட்டதால், இந்த போட்டியில் இந்தியாவிற்கு பந்து வீச்சில் பின்னடைவு ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கலாம். குறிப்பாக அஸ்வின் இந்த டெஸ்ட் போட்டியிலிருந்து பாதியிலேயே விலகிய பட்சத்தில் இந்தியா பத்து பிளேயர்களோடு சேர்த்து ஒரே ஒரு சப்ஸ்டிடூட் பிளேயரையும் சேர்த்து விளையாடும்.

ஆனால் அந்த சப்ஸ்டிடியூட் பிளேயர் ஒரு ஃபீல்டராக மட்டுமே செயல்படுவார். மற்ற படி பேட்டிங் மற்றும் பௌலிங் செய்ய முடியாது. எனவே இந்த போட்டியில் இந்தியா பேட்டிங் மற்றும் பந்து வீச்சை பொறுத்தவரை 10 பேர் கொண்ட அணியாக மட்டுமே செயல்படும். எனினும் இனி வரும் நான்கு மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு அஸ்வின் வந்துவிடுவார் என்று கூறப்படுகிறது. மேலும் ஒரு முக்கியமான தகவல் என்னவென்றால் இந்த இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் சீரிஸுக்கு கடந்த ஆண்டிலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்போது பார்த்தால் கோலி இல்லை, ராகுல் இல்லை, ஷமி இல்லை. தற்போது ரவி அஸ்வினுக்கும் பிரச்சனை, என முக்கியமான பிளேயர்கள் வெற்றிக்கான போட்டியை மிஸ் செய்கின்றனர். இது இந்தியாவிற்கு எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

இது மட்டுமில்லாமல் இந்த போட்டியில் மிக சிறப்பாக இங்கிலாந்து அணி வீரர்கள் ஆடி வருகின்ற நிலையில், எப்படி இந்திய பந்து வீச்சாளர்கள் சமாளிக்க போகிறார்கள் எனபது 3-ஆம் நாள் தான் தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *