நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானம் ராஜ்கோட்டில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ரெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடிவரும் நிலையில், இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் விளையாட போகும் 11 வீரர்களின் போட்டியில் சர்பராஸ்கான் மற்றும் துரூவ் ஜோரல் தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் இவர்கள் இருவருமே இந்தியாவுக்காக தங்களது அறிமுகப் போட்டியில் விளையாட வாய்ப்பை பெற்றுள்ளனர். இதில் சர்பராஸ்கான் மிக முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார். ஏனென்றால் டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் ரன் மெஷின் போல ரன்களை குவித்தும் கூட சில காரணங்களால் பிசிசிஐ அவரை தேர்வு செய்யாமலே இருந்தது.
அதற்கு என்ன காரணம் என்று இன்னும் தெரியவில்லை. ஆனால் தற்போது இந்த இங்கிலாந்து சீரிஸில் அவர் தேர்வு செய்யப்பட்டு, இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட பட்சத்தில் அப்போது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று தான் சொல்லவேண்டும். குறிப்பாக அனில் கும்ப்ளே சர்பராஸ்கானுக்கு அறிமுக டெஸ்ட் கேப்பை வழங்கினார். இந்த நிலையில் இதை அருகில் இருந்து கவனித்த சர்பராஸ்கானின் அப்பா மற்றும் சர்பராஸ்கானின் மனைவி ஆனந்தத்தில் கண்கலங்கி விட்டனர்.
பின்னர் சர்பராஸ்கானின் அப்பா முத்தமிட்டு ஆனந்த கண்ணீரோடு காணப்பட்டார். பின்னர் ரோஹித் சர்மா சர்பாஸ்கானின் அப்பாவை கட்டிபிடித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அதே போல துருவ் ஜூரலுக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் டெஸ்ட் கேப்பை வழங்கினார்.
இந்நிலையில் பேசிய தினேஷ் கார்த்திக் நீல ஜெர்சியில் விளையாடுவதை விட வெள்ளை ஜெர்சியில் விளையாடுவது உண்மையில் வித்தியாசமானது. கிரிக்கெட்டின் கடினமான போட்டிக்கு வரவேற்கிறேன். இவ்வளவு இளம் வயதில் இந்த வாய்ப்பை பெற்றது பெருமையான விஷயம். நீங்கள் நன்றாக விளையாட எனது அன்பான வாழ்த்துக்கள் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். குறிப்பாக இந்த டெஸ்ட் கேப்பை நான் வழங்குவேன் என உண்மையில் எதிர்பார்க்கவில்லை. இந்த வாய்ப்பை தனக்கு வழங்கிய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு மிக்க நன்றி என கூறினார்.
இந்த போட்டியில் விளையாடிய சர்பராஸ்கான் 66 பந்துகளில் 62 ரன்கள் அடித்து துரதிஷ்டவசமாக ரன் அவுட் செய்யப்பட்டார்.