தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சீரிஸில் இந்திய அணி விளையாடிவரும் நிலையில், இதன் பிறகு ஐபிஎல் டி20 லீக் நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎல் மே இறுதியில் முடியும் பட்சத்தில் ஜூன் 2ஆம் தேதியிலிருந்து டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நடைபெறவுள்ளது. எனவே முழு வீச்சில் ஐபிஎல் ட்20 லீக் அதாவது ட்வெண்ட்டிஃபார்மேட்டில் விளையாடிவிட்டு அப்படியே உலகக்கோப்பையில் விளையாட சரியாக இருக்கும்.
குறிப்பாக இது இந்திய அணிக்கு நல்லதாகவும் இருக்கும். இந்நிலையில், இந்த இருபது உலகக்கோப்பை குறித்து வெளியான முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த டி20 உலகக்கோப்பை தொடரை எதிர்கொள்ள இந்தியா வேகமாக தயாராகி வருகிறது. குரூப் நான்கு போட்டிகள் அமெரிக்காவில் நடக்க இருக்கும் பட்ச்சதில் இந்தியா முதலாவதாக அமெரிக்கா செல்லும். குறிப்பாக ஐபிஎல் பிளே ஆஃப்க்கு தகுதி பெறாத அணிகளில் உள்ள பிளேயர்களை முதலாவதாக அனுப்ப உள்ளதாம் பிசிசிஐ.
இதேபோல தான் கடந்த ஆண்டுமே டெஸ்ட் உலகக்கோப்பை ஃபைனலை எதிர்கொள்ளும் அமைப்பில் இந்திய பிளேயர்கள் வேகமாக இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனவே இந்த வருடமும் அப்படி செல்லப்போவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால், கடந்த ஆண்டு பார்த்தோம் என்றால் பிளேயர்களின் வேலைப்பளுவை குறைக்கும் வகையில் அவர்கள் கண்காணிக்கப்பட வேண்டுமென பிசிசிஐ என்சிஏவுக்கு அறிவுரை வழங்கியது. ஆனால் இந்த முறை அப்படி ஏதும் வழங்க போவதாக தெரியவில்லை என கூறப்படுகிறது. ஒரு வேளை டி20 உலகக்கோப்பை தொடர் தான் ஐபிஎல் போலவே டி20 ஃபார்மட் தான் என பிசிசிஐ கருதுகிறது என்று புரியவில்லை.
ஆனால், 5 போட்டி கொண்ட சீரிஸில் ப்ளேயர்கள் விளையாடும் பொழுதே வேலைப்பழு என்ற பெயரில் ஓய்வெடுக்கச் சென்றுவிடுகின்றனர். ஆனால், 14 போட்டி கொண்ட ஐபிஎல் எதையுமே மிஸ் செய்யாமல் விளையாடுகின்றனர். இப்படி விளையாடுவதால் பிரச்சனை இல்லை, ஆனால் பிளேயர்களுக்கு காயம் ஏற்பட்டால் டி20 உலகக்கோப்பையில் அது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்பது தான் நடுநிலையான கிரிக்கெட் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.