இன்ஸ்டாகிராமில் ஒருவருக்கொருவர் அன்ஃபாலோ செய்த ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா

Author:

ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கி ஹர்திக் பாண்டியா அவர்களை கேப்டனாக நியமித்த காரணத்தினால் அவரது ரசிகர்கள் பெரும் கோபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடர்வதில் இருந்து விலகி தங்களது ஆக்ரோசத்தை காட்டினார்.

Rohit Sharma and Hardik Pandya Unfollowed Each Other On Instagram
Rohit Sharma and Hardik Pandya Unfollowed Each Other On Instagram

ஹர்திக் பாண்டியா அவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு பின்னர் மெகா ஏலம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு குஜராத் அணிக்காக கேப்டனாக நியமிக்கப்பட்டு வழிநடத்தி அந்த அணிக்காக முதல் வருடத்திலேயே கோப்பையை இன்று கொடுத்தார் மற்றும் கடந்த வருடத்தில் இறுதிப் போட்டி வரை கொண்டு சென்று குஜராத் அணியானது சிஎஸ்கே அணியிடம் தோற்று கடைசி ஓவரில் கோப்பையை தழுவியது. சமீப காலத்தில் ரோஹித் சர்மா அவர்களின் பார்ம் சிறப்பாக இல்லாதது மற்றும் அவருக்கு வயது அதிகம் ஆகிவிட்டது என்ற காரணங்களால், எனவே இனி மும்பை இந்தியன்ஸ் அணியை வேறொரு இளம் வீரர் தான் தாங்கி நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மும்பை இந்தியன் அணியானது ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியிடம் பல கோடிகளை கொடுத்து வாங்கியதாக தகவல் வெளிவந்தது. ஒரு சில வாரங்களுக்கு பிறகு அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியும் தனது இன்ஸ்டாகிராம் வலைப்பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒரு பதிவின் மூலம் ஹர்திக் பாண்டியா தான் இனி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் என்று பதிவை வெளியிட்டது.

இதனால் சமூக வலைதளங்களில் ரோகித் சர்மாவின் ரசிகர்கள் எதற்காக ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கினீர்கள் என்று கூறியவாறு தங்களது கோபத்தை காட்டி வந்தனர். அது மட்டும் இல்லாமல் ஹர்திக் பாண்டியா ஏற்கனவே மும்பை அணியில் இருந்து தான் விளையாடி பின்னர் குஜராத் அணிக்கு மெகா ஏலம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை சுட்டிக்காட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வாங்கி கொடுத்த ரோஹித் சர்மாவை எப்படி அவர் இருக்கும் வரை ஹர்திக் பாண்டியா அவர்களுக்கு கேப்டன் பதவியை வழங்குவீர்கள் என்று கேள்வி கேட்டு வந்து கொண்டிருக்கின்றனர்.

இப்போது ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் தன்னுடைய முழு கவனத்தையும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை அவ்வப்போது அவருடைய இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வ வலை பக்கத்தில் பதிவுகளாக வெளியிட்டு வருகிறார். ஒரு பக்கத்தில் ஹர்திக் பாண்டியாவின் மீது பெரும் கோபத்தில் ரசிகர்கள் இருந்தாலும், அதனை சில நாட்களுக்குப் பிறகு மறந்து விட்டனர்.

இந்த நிலையில்  ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் ஒருவருக்கொருவர் இன்ஸ்டாகிராம் வலைப்பக்கத்தில் பின் தொடர்ந்து வருகிறார்கள். ஆனால் தற்போது என்ன காரணமோ என்று தெரியவில்லை ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் ஒருவருக்கொருவர் பின் தொடர்வதில் இருந்து விலகி உள்ளனர் அதாவது அன்ஃபாலோ செய்துள்ளனர். எனவே ஹார்திக் பாண்டியா மற்றும் ரோஹித் சர்மா இருவருக்கும் இருக்கும் இந்த கருத்து வேறுபாடு வருகிற ஐபிஎல் தொடரில் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ரசிகர்கள் சிலர் ரோகித் சர்மா ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஹர்திக் பாண்டியாவின் கேப்டன் பதவிக்கு கீழ் விளையாட மாட்டார் என்றும் கூறி வருகின்றனர். அது மட்டுமில்லாமல் ரோகித் சர்மா இந்த வருடத்தோடு மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகுவதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *