இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வரும் டெஸ்ட் தொடரில் இதுவரை டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ள பட்சத்தில், இந்த இரண்டு போட்டியிலுமே இங்கிலாந்து அணியின் ஜோ ரூட்டிடமிருந்து பெரிய இன்னிங்ஸை எதிர்பார்த்த அளவிற்கு பார்க்க முடியவில்லை. ஏனெனில் முந்தைய டெஸ்ட் தொடர்களில் எப்பொழுதும் ஜோ ரூட் இந்தியா அணிக்கு எதிராக நிறைய சதங்களை அடித்து உள்ளார். இந்த நிலையில் டெஸ்ட் தொடர் என்று வந்து விட்டால் இந்திய அணி என்றால் விராட் கோலி, நியூசிலாந்து அணி என்றால் கேன் வில்லியம்சன், இங்கிலாந்து அணி என்றால் ஜோ ரூட் தான் அனைவர் நினைவிற்கும் வருவார்கள்.
அதாவது இவர்கள் பெரிய அளவில் அதிரடியாக ஆடுவதில்லை. ஆனால் அணியின் மிகப்பெரிய தூணாக இருந்து அணியின் வெற்றிக்கு உதவும் வகையில் நம்பிக்கையான பேட்டிங்கை ஆடுவார்கள். அதன்படி, தனது இத்தனை வருட கிரிக்கெட்டில் தனது சொந்த ஸ்டைலில் விளையாடி வந்த ஜோ ரூட், தற்போது பேஸ்பால் கிரிக்கெட் அணுகுமுறையால் ஒரு அட்டாக்கிங் பேட்டராக விளையாட ஆரம்பித்துள்ளார்.
இந்த அணுகுமுறையால் ரன் வராத பட்சத்தில், அதனால் அவர் விமர்சனங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதன்படி தற்போது இது குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், பேஸ்பால் கிரிக்கெட் அப்ரோச்சால் தற்போது ஒவ்வொரு இங்கிலாந்து பேட்ஸ்மேன்களும் எடுத்தவுடனே ஐந்தாவது கியரில், அதாவது பந்துகளையும் அடித்து ஆட விளையாடுகின்றனர். “அவர்கள் அப்படி விளையாடுவது பற்றி எனக்கு கவலையில்லை” ஏனென்றால் அதில் அவர்கள் சிறந்தவர்களாக இருக்கலாம். ஆனால், ஜோ ரூட் அப்படி விளையாடுவதை நிச்சயமாக மறந்துவிட வேண்டும். ஜோ ரூட் ஜோ ரூட்டாகவே விளையாடித்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை பத்து ஆயிரம் ரன்கள் சேர்த்துள்ளார். எனவே அவருக்கு பேஸ்பால் அப்ரோச் தேவையில்லை. அணி நிர்வாகத்தில் இருக்கும் யாராவது ஒருவர் இதை அவரிடம் தெரிவிக்க வேண்டுமென மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
மைக்கேல் வாகன் அவர்களின் இந்த கருத்து உண்மை தான் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். எனவே ஜோ ரூட் இந்த அணுகுமரியை மாட்ரினால் ஒன்றே நன்றாக சிறப்பாக விளையாட முடியும் என்பதே உண்மை. எனவே பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் ஜோ ரூட் எப்படி ஆட போகிறார் என்று இனி வரும் போட்டிகளில்.