இங்கிலாந்து அணியானது ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த நிலையில் ஏற்கனவே இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல், இரண்டாவது டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் மற்றும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சரி சமம் செய்துள்ளது.
முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி இல்லாமல் இருந்ததால் ரசிகர்கள் விராட் கோலிக்கு என்ன ஆயிற்று என்று கேள்வி கேட்ட வந்த வண்ணம் இருந்தனர். விராட் கோலி தனது தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் மற்றும் இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை என்று பிசிசிஐ கூறியிருந்த நிலையில், அவரது ரசிகர்கள் அடுத்து மூன்று போட்டியிலாவது விராட் கோலி விளையாடுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். தற்போது பிசிசிஐ அடுத்து மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான ஸ்குவாடை அறிவித்துள்ளது.
அதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விலகிய ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் அடுத்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆனால் விராட் கோலியின் பெயர் அதில் இடம்பெறவில்லை இதிலிருந்து விராட் கோலி அடுத்து மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாட மாட்டார் என்பதை பிசிசிஐ கூறி இருக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரங்களை பிசிசிஐ வெளியிட்ட பட்சத்தில், அதில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை. அவருக்கு வழக்கமாக ஏற்படக்கூடிய முதுகு பகுதியில் பிடிப்பு மற்றும் தொடைப்பகுதியில் வழி இருப்பதாகவும், இதனால் அவர் அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளை தவறிவிடலாம் எனவும் கூறப்பட்டது. ஆனால் அப்படி ஸ்ரேயாஸ் ஐயரால் காயம் காரணமாக விளையாட முடியவில்லை என்றால், பிசிசிஐ அணி அறிவிப்பின்போது இதை குறிப்பிட்டு சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அப்பிடி ஏதும் சொல்லாமல் இருந்ததால், இவர் வேண்டாம் என சீரிஸில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என ரசிகர்களால் கருதப்பட்டது.
இந்நிலையில் தற்போது வெளியான தகவலின் படி அது உண்மைதான் என தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முடிவுக்கு பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் தனக்கு முதுகு பகுதியில் பிடிப்பிருப்பதாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்தாராம். ஆனால் அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிக்கான அணி தேர்வுக்கு முன்பதாகவே தான் நல்ல அளவில் தயாராகிவிட்டதாக தகவல் தெரிவித்தாராம். ஆனால் கடந்த இரண்டு போட்டியிலுமே ஸ்ரேயாஸ் சரியாக ஆடவில்லை என ஒரு கட்டத்தில் ரஜத் படிடார் அவரா என்று கேள்வி வந்தபோது, ஸ்ரேயாஸை தவிர்த்துவிட்டு ரஜத் படிடாரை தேர்வு செய்துள்ளனர். எனவே, ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த ஆப்கானிஸ்தான் T20 சீரிஸிலும் தவிர்க்கப்பட்டார். இப்போது இந்த இங்கிலாந்து சீரிஸில் இருந்தும் தவிர்க்கப்பட்டுள்ளார். மேலும், T20 உலகக்கோப்பை இந்திய அணியிலும் கூட டீம் காம்பினேஷன் காரணமாக ஸ்ரேயாஸுக்கு அணியில் இடம் கிடைக்காமல் போக வாய்ப்புகள் இருக்கலாம்.