இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டி தொடரில் அடுத்து வரும் மூன்று போட்டிகளில் சுழற் பந்து வீச்சாளர்களின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் சுழற் பந்து வீச்சாளர்கள் எப்படி அணியின் வெற்றிக்கு பயனுள்ளதாக இருக்கப் போகிறார்கள் என்பதை மைதானத்தின் சூழல் மிக முக்கிய பங்கு வைக்கப் போகிறது என்று கூறலாம்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வரும் 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் முதல் இரண்டாவது டெஸ்ட் போட்டிகள் முடிந்து தொடரானது ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற 15ஆம் தேதி ராஜ்கோட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பதாக பேசிய இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கலம் மைதானமானது ஸ்பின் பௌலிங்க்குக்கு சாதகமாக இருந்தால் நாங்கள் நான்கு ஸ்பின்னர்களை பயன்படுத்துவோம் என்று கூறினார். குறிப்பாக பார்ட் டைம் ஸ்பின்னர் ஆன ஜோரூட்டை சேர்த்தால் ஐந்து ஸ்பின்னர்களாக இருப்பார்கள்.
ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் ஜாக் லீச்சுக்கு காயம் ஏற்பட்டதால் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை. இந்நிலையில் தற்போது வெளியான தகவலின் படி காயம் காரணமாக ஜாக் லீச் இந்த தொடரில் இருந்து முழுவதுமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக இதில் முக்கியமான விஷயமே அவருக்கு பதிலாக எந்தவொரு மாற்று வீரரையும் தேர்வு செய்ய போவதில்லை என இங்கிலாந்து அணி உறுதியாக தெரிவித்துள்ளது. எனவே இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் இங்கிலாந்து இனி வரும் மூன்று டெஸ்ட் போட்டியிலும் ஒரே மாதிரியான ஸ்பின் பௌலிங் அட்டாக்கை பயன்படுத்தும். அதே நேரத்தில் இந்திய அணியை பார்த்தோம் என்றால் அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிக்கான வீரர்களின் பட்டியலில் ஐந்து ஸ்பின் பௌலர்களை தேர்வு செய்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் சுழற் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் எப்படி இருக்க போகிறது என்று.