இந்தியாவுக்கு எதிரான ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. மூன்றாவது நாளில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய போது, அன்றைய நாளில் 95 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் நான்காவது நாளில் இரண்டாவது இன்னிங்சில் 50 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்த நிலையில், 122 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த தோல்வியானது இங்கிலாந்துக்கு விழுந்த மிகப்பெரிய அடியாகும்.
என்ன செய்வதென்றே தெரியாத வகையில் மோசமாக தோற்றுள்ளது. குறிப்பாக இந்தியா ஒரு அனுபவமே இல்லாத இளம் இந்திய வீரர்களை வைத்து இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது. அதாவது பத்து பேரை வைத்து பதினொன்று பேரை வீழ்த்தியுள்ளது. மேலும், இந்த சீரிஸில் இன்னும் இரண்டு போட்டி இருக்கும் பட்சத்தில் இரண்டிலுமே வெற்றி பெற்றால் தான் இங்கிலாந்து சீரீஸை வெல்ல முடியும். இல்லையென்றால் பேஸ்பால் கிரிக்கெட் என்ற அப்ரோச்சில் இங்கிலாந்து விளையாட ஆரம்பித்ததிலிருந்து, இது ஒரு முதல் தோல்வியாக இருக்கலாம்.
அப்படி ஒரு வேளை தோற்றால் நாங்கள் தோற்றுவிட்டோம் வெற்றி தோல்வி என்பது சகஜம். எனினும் நாங்கள் தொடர்ந்து இப்படித்தான் விளையாடுவோம் என இங்கிலாந்து கூறினாலும், பேஸ்பால் கிரிக்கெட் என்ற அப்ரோச்சின் மதிப்பு குறைந்துவிடும். ஏனென்றால் இந்த அப்ரோச்சில் இங்கிலாந்து இன்னும் தோற்கவேயில்லை என்பது தான்.
இந்த மூன்றாவது ரஸ் போட்டியின் தோல்விக்கு பிறகு பேசிய பென் ஸ்டோக்ஸ் பென் டக்கட் நம்பவே முடியாத இன்னிங்சை ஆடினார். அவர் விளையாடியது போலவே நாங்கள் எல்லோருமே விளையாட நினைத்தோம். முதல் இன்னிங்சில் நாங்கள் பேட்டிங் செய்ததைப் பொறுத்தவரை, ஸ்கோர் செய்வதற்கான வாய்ப்புகளை எதிர்பார்த்து இந்தியா அடித்திருந்த ரன்களை நெருங்கி வர நினைத்தோம். குறிப்பாக மூன்றாவது நாளில் பந்து வீச நினைத்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததைவிட கொஞ்சம் முன்னதாகவே பந்து வீச வேண்டிய நிலை ஏற்பட்டது. அதாவது நான் என்ன சொல்கிறேன் என்றால் எங்கள திட்டப்படி, சில விஷயங்கள் நடக்கவில்லை. ஒவ்வொருவரும் எங்களைப் பற்றி இதை அப்படி செய்யலாம், இப்படி செய்யலாம் என்று ஏதாவது பேசி வருகின்றனர். ஆனால் ஒரு அணியாக டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் எங்கள் பிளேயர்கள் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தான் எங்களுக்கு முக்கியம். இந்த சீரிஸில் ஒன்றுக்கு இரண்டு என ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளோம். சீரிஸை கைப்பற்ற இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளது. நாங்கள் கம்பேக் கொடுக்க வேண்டிய நேரம் இது. நாங்கள் இப்போது சீரீஸின் பின்னால் இருக்கலாம், ஆனால் மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று சீரிஸை வெற்றியாக முடிப்போம் என பென் ஸ்டோக்ஸ் பேசியுள்ளார்.