முதல் டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் தோற்ற இந்திய அணியானது விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பதிலடி கொடுக்க தயாராகி உள்ளது என்றே கூறலாம். அந்த நிலையில் நேற்று நடந்த இரண்டாம் நாளில் முதல் நாளைப் போலவே யஷஸ்வி ஜெய்ஸ்வால் அவர்கள் எல்லா பந்துகளையும் சரியாக ஆடி இங்கிலாந்து பந்துகளை திணறச் செய்தார்.
வீரர்கள் சொற்பொழிவிற்கு பெவிலியன் திரும்பி இருந்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டும் பொறுமையாக ஆடி இந்தியாவின் மானத்தையே காப்பாற்றினார். அதுமட்டுமில்லாமல் இவர் ஆடி இந்த ஆட்டத்தில் பெரும் 10 இன்னிங்ஸில் சச்சின் கபில் தேவ் போன்ற வீரர்கள் படைத்த சாதனையை இவர் முறியடித்து உள்ளார் என்றே கூறலாம். மட்டுமில்லாமல் இவர் ஆடியோ இந்த அதிரடியான ஆட்டம் முந்தைய அதிரடி தொடக்க வீரர் வீரேந்தர் சேவாக் ஆட்டத்தை பார்த்தது போலவே உள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இவர் முதல் இன்னிங்ஸில் 290 பந்திகளில் 209 ரன்கள் 19 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் உட்பட அடித்து விளாசி உள்ளார். இதனைப் பார்த்த இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் அசந்து போனார்கள். ரோகித் சர்மா, ஸ்ரேயா செய்யாறு மற்றும் சுமன் கில் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களை வீழ்த்திய இங்கிலாந்து அணியானது,
யஷஸ்வி ஜெய்ஸ்வால் அவரை வீழ்த்த முடியாமல் திணறியதால் பந்துக்கள் பௌண்டரிக்கு சென்றது.
முதல் டெஸ்ட் போட்டியில் சதத்தை நெருங்கி அடிக்க முடியாமல் சென்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிக்ஸர் மூலம் சதத்தை விளாசினார். தன்னுடைய அதிரடியான ஆக்ரோஷமான ஆட்டத்தை நிரூபித்து சதத்தை தொடர்ந்து இரட்டை சதத்தையும் அடித்தார். அதுமட்டுமல்லாமல் மிகக் குறைந்த இன்னிங்சில் சொந்த மண்ணில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.
சச்சின் மற்றும் கவிழ்ந்து போன்ற லெஜன்ட் வீரர்கள் கூட இந்த சாதனையை செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விளையாடிய 10 இன்னிங்ஸில் இரண்டு இரட்டை சதம் மற்றும் இரண்டு சதங்களை அடித்து உள்ளார் என்பது இவருடைய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் நீங்காத இடத்தை வைத்திருக்க உதவும் என்று சொல்லலாம்.
இத்துடன் இங்கிலாந்து வீரர்கள் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் களையும் இழந்து 253 தங்களை எடுத்து உள்ளது. தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயிக்க 171 முன்னிலையில் விக்கெட் ஏதும் விடாமல் ஆடி வருகிறது. இதே மாதிரி ஆடி வந்தால் கண்டிப்பாக இந்தியா இந்த டெஸ்ட் போட்டியில் முந்தைய டெஸ்ட் போட்டிக்கு திருப்பி கொடுக்க வெற்றி பெறும் வாய்ப்பை வைத்துள்ளது.