T20W உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவை பழி வாங்குமா இந்தியா

Author:

இருபது ஓவர் உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் தோற்ற பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிச்சல் மார்ஸ் அடுத்த போட்டிக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென தனது அணி வீரர்களுக்கு அறிவுரை வழங்க உள்ளார். அதாவது மீண்டும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதலாக இந்த ஓவர் உலகக்கோப்பையில் சூப்பர் 8-யில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோத உள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு எதிராக வெற்றி பெற்றால் தான் அரை இறுதிக்கு வாய்ப்பு என்று நிலைமையை கடினமாக மாற்றியுள்ளது.

ind vs aus wt20 match

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோல்விய பற்றி பேசிய கேப்டன் மிச்சல் மார்ஸ் இந்த தொடரில் நிறைய அணிகள் மைதானம் எப்படி வேலை செய்கிறது என்பதை புரிந்து கொள்ளும் நிலையில் முதலாவதாக பந்து வீச்சை தேர்வு செய்து பின்னர் பேட்டிங் ஆடினர். அதைத்தான் இப்போது நாங்களும் செய்தோம். ஒருவேளை இந்த போட்டியின் முடிவை பற்றி யோசித்தால் நாங்கள் டாஸ்ஸில் வெற்றி பெற்றிருக்கலாம் தோற்றிருக்கலாம் என்பதில்லை.

இந்த போட்டியைப் பொறுத்தவரை ஆப்கானிஸ்தான் ஒரு சிறந்த கிரிக்கெட்டை ஆடியது. எனவே நிச்சயமாக அவர்களை பாராட்டியாக வேண்டும். ஆனால் பீல்டிங்கல் இன்று எங்களுக்கு மோசமான நாளாக அமைந்தது. அடுத்த போட்டியில் நாங்கள் இந்தியாவிற்கு எதிராக ஆட உள்ளோம். நாங்கள் அந்த போட்டியில் வெற்றி பெற வேண்டியது அவசியம். எனினும் இந்தியாவிற்கு எதிராக விளையாடி வெற்றி பெற சிறந்த அணி எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று கேப்டன் மிச்சல் மார்ஸ் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி தற்போது அரை இறுதிக்கு தகுதி பெறாமல் தொடரை விட்டு வெளியேறும் நிலை வரலாம் என்ற சூழல் மாறியுள்ளது. அதாவது ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் எட்டு போட்டியில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்படி குரூப் ஏவில் புள்ளிப்பட்டியலை பார்த்தோம் என்றால் இந்தியா இதுவரை சூப்பர் எட்டில் விளையாடியுள்ள இரண்டு போட்டியிலுமே வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.

ஆனால், ஆஸ்திரேலியா இரண்டு போட்டியில் ஒரு வெற்றி ஒரு தோல்வி என இருக்கும் பட்சத்தில் செமிபைனலுக்கு தகுதி பெற வேண்டுமானால், மீதமுள்ள ஒரு போட்டியாக நாளை 24 ஜூலை 2024 ஆம் தேதி இந்தியாவுடன் மோதவுள்ள போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற வேண்டியது அவசியம். ஆனால் அப்படி இல்லாமல் ஆஸ்திரேலியா இந்தியாவிடம் தோல்வியை சந்தித்தால் பின்னர் நடைபெறும் ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் குரூப் ஏவில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

இதனால் ஆஸ்திரேலியா பின் தனது நாட்டுக்கு ஏற வேண்டிய நிலை ஏற்படும். எனவே தற்போது ஆஸ்திரேலியாவின் அரை இறுதி வாய்ப்பானது இந்தியாவை வீழ்த்துவதில் தான் உள்ளது. ஆனால் கடந்த 2023 ஆம் ஆண்டை பார்த்தோம் என்றால் டெஸ்ட் உலகக்கோப்பை ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் U19 உலகக்கோப்பை என பல ஏமாற்றங்களைத் தந்த ஆஸ்திரேலியாவிற்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டிய நேரமாக இது இருக்கும். இதன்படி இந்த போட்டியை பழிவாங்கும் நோக்கில் இந்தியா விளையாட வாய்ப்புகள் இருக்கலாம். குறிப்பாக ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்த தொடரை விட்டே வெளியேற்றினால் தான் இந்த இருபது உலகக்கோப்பை வெல்லவும் கூட இந்தியாவிற்கு நல்ல ஒரு வாய்ப்பாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *