ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 தொடரின் இரண்டாவது போட்டி அடிலேட் ஓவலில் நடைபெற்றது. ஏற்கனவே முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியானது வெஸ்ட் இண்டீஸ் அணியை குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நிலையில் இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது வெற்றி பெற வேண்டும் என்றவாறு இன்று 1.30 PM மணிக்கு களம் இறங்கியது.
டாசை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோமன் பவல் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஜோஸ் இங்கிலீஷ் ஆகிய இருவரும் சொற்[ப ரன்களுக்கு ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் மிட்சல் மார்ஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் நன்றாக ஆடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சுகளை சிதறடித்தனர். இருப்பினும் அல்சாரி ஜோசப் வீசிய பந்தில் மிட்சல் மார்ஸ் ஜேசன் ஹோல்டர் கையில் பந்தை கொடுத்து கேட்சனார். இவர் 12 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டம் இழந்தார்.
ஆனால் மற்றொரு பக்கமோ கிளன் மேக்ஸ்வெல் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களின் பந்துவீச்சுகளை ஃபோர்கள் மற்றும் சிக்ஸர்களாக நொறுக்கினார். இவர் 55 பந்துகளில் 120 ரன்கள் அடித்து 12 போர்கள். 8 சிக்ஸர்களை அடித்து கடைசி வரை நின்று அணிக்கு 241 ரன்களை சேர்த்து தந்தார். கடைசியில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 218.18 ஆக இருந்தது. எனவே ஆஸ்திரேலியா அணியானது 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 242 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதுவரை அதிக டி20 சதங்களை அடித்த ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார். அதாவது ரோகித் சர்மா சர்வதேச போட்டிகளில் 5 டி20 சதங்களை அடித்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது அந்த சாதனையை கிளன் மேக்ஸ்வெல் இன்று 120 ரன்களை அடித்து அதிக டி20 சதங்களை அடித்த வீரர்களின் பட்டியலில் முதலில் உள்ளார்.
பிறகு 242 ரன்கள் இலக்கை அடிக்க களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடாததால் வெஸ்ட் இண்டீஸ் அணி ரன்களை அடிக்க திணறியது. மிடில் ஆர்டரில் வந்த ரோமன் பவல் 36 பந்துகளில் 63 ரன்கள் 5 ஃபோர்கள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தி கொண்டே சென்றார். இருப்பினும் ரோமன் பவல் ஆடம் ஜாம்பா ஓவரில் விக்கெட்டை இழந்து திரும்பினார். இறுதியில் 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 27 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
ஆஸ்திரேலியா அணியில் ஸ்டோனிஸ் 3 விக்கெட்டுகளையும், ஹாசல்வுட் மற்றும் ஜான்சன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். எனவே ஆஸ்திரேலியா அணியானது வெஸ்ட் இண்டீஸ் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்று கணக்கில் தொடரை கைப்பற்றியது.