ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் வெற்றியை பெற்றது.
டாஸை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோவ்மேன் பாவெல் பவுலிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி பேட்டிங் செய்ய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஜோஸ் இங்கிலீஷ் ஆகிய இருவரும் களத்திற்கு வந்தனர். டேவிட் வார்னர் மற்றும் ஜோஸ் இங்கிலீஷ் ஆகிய இருவரும் அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்தனர். குறிப்பாக டேவிட் வார்னர் முதல் ஓவிலிருந்து அதிரடி காட்டத் தொடங்கினார். இவர் 36 பந்துகள் விளையாடி 70 ரன்கள் அடித்து 12 ஃபோர்கள் 1 சிக்ஸ் அடித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சுகளை சிதறடித்தார்.
இருப்பினும் அல்ஜாரி ஜோசப் ஓவரில் தனது விக்கட்டை இழந்து பெவிலியன் திரும்பினார் டேவிட் வார்னர். கடைசியில் ஆல் ரவுண்டர் டிம் டேவிட் நல்ல அதிரடியான ஆட்டத்தை ஆடி 4 ஃபோர்கள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்து அணிக்கு ரன்களை குவித்தார். இதன் மூலம் ஆஸ்திரலியா அணியானது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 213 ரன்களை அடித்து ஏழு விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ஆன்ட்ரே ரசல் 3 விக்கெட்டுகளையும் மற்றும் அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அடுத்து பேட்டிங் ஆட வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் மற்றும் ஜான்சன் சார்லஸ் ஆகிய இருவரும் சிறப்பான தொடக்கத்தை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கொடுத்தனர். அதற்குப் பின்னர் வந்த பூரன், பவல், ஹோப் மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றத்தை தந்தனர். கடைசியில் வந்த ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் அதிரடியான ஆட்டத்தை ஆடி 15 பந்துகளில் 34 ரன்கள் அடித்து 3 ஃபோர்கள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்தார். இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 202 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் ஆஸ்திரேலியா அணியானது 11 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.