இந்த ஆண்டின் பாதிக்கு பிறகு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரானது ஜூன் மாதம் 2ஆம் தேதியிலிருந்து அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக நடைப்பெற உள்ளது. இந்நிலையில், இந்த இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரில் விளையாட போகும் இந்திய அணி குறித்து மிக மிக முக்கியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்த உலக கோப்பை தொடரை குறித்து பேசியுள்ள பிசிசிஐ செக்ரட்டரி ஜெய் ஷா, இந்தியா இந்த டி20 உலக கோப்பை தொடரில் ரோஹித் ஷர்மாவின் தலைமையின் கீழ் நிச்சயமாக கோப்பை வெல்லும் என்று உறுதியாக கூறியுள்ளார்.
கூறியது மட்டுமல்லாமல் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார். அதேபோல் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2023 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் ஒரு நாள் உலகக்கோப்பை இழந்தாலும் தொடர்ந்து பத்து போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வலுப்படுத்தியதாக கூறியுள்ளார். குறிப்பாக வருகிற டி20 உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மா கேப்டன், பாண்டியா துணை கேப்டன் மற்றும் டிராவிட் கோச்சாக இருப்பார் என்று கூறிய ஜெய்சா விராட் கோலி இந்த உலகக்கோப்பை. அணியில் இடம் பெற பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறி உள்ளார்.
உண்மையில் ஆனால், விராட்கோலி இல்லாத ஒரு ஐசிசி தொடரை நினைத்துக்கூட பார்க்க முடியாது. கடந்த 2022ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை மற்றும் 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை தொடரில் என இரண்டு தொடர்களிலுமே அதிக ரன் அடித்த பிளேயர்கள் பட்டியலில் விராட் கோலி தான் நம்பர் ஒன் என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த பிளேயராக இருந்தார். அதாவது இந்தியாவுக்காக அதிக ரன் அடித்துள்ளார் கடந்த உலக கோப்பை போட்டிகளில். எனவே கோலி உலகக்கோப்பை அணியில் இருப்பது மிக அவசியம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அது மட்டுமில்லமால் இந்த உலக கோப்பை தொடரில் தங்களுடைய இடத்தை தக்க வைத்து கொள்ள வருகிற ஐபில் போட்டிகளில் திறமையை காட்ட தீவிர பயிற்சியில் இறங்கி வருகின்றனர்.