டி20 போட்டி என்றாலே நம் அனைவர் கண் முன்னே வரும் அணி எனறால் அதுவெஸ்ட் அணி இதன். ஏனெனில் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் தான் அதிரடி ஜாம்பவான் வீரர்கள் கிறிஸ் கெயில், கீரோன் பொல்லார்ட், ஆண்ட்ரே ரசல் போன்ற அதிரடி வீரர்கள் விளையாடிய அணி. இருப்பினும் இந்த அணியால் தற்போது அதிரடி வீரர்கள் இருந்தும் வெற்றியை பெற முடியாமல் தவிக்கிறது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 சீரிஸில் விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இரண்டு போட்டிகளில் தோற்று சீரீஸை இழந்த பட்சத்தில், தற்போது நடந்துள்ள மூன்றாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று சீரிஸை 2-1 என்ற கணக்கில் முடித்துள்ளது. ரசல் மற்றும் ரூதர் போர்டின் காட்டுத்தனமான அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் 220 ரன்கள் எடுத்தது. பின்னர் இதை சேசிங் செய்த ஆஸ்திரேலியா அணி 173 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
இந்த சீரீஸானது ஒரு சீரியஸான சீரிஸாக இல்லாவிட்டாலும், இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றாரல், இந்த சீரிஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்துப் போட்டியிலுமே 200 மேற்பட்ட ஸ்கோரை பதிவு செய்துள்ளது. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் வரிசை நீண்டதாக உள்ளது.
அதன்படி பிரண்டன் கிங், ஜான்சன், சார்லஸ், நிக்கோலஸ் பூரன், ஹோப், கேப்டன் ரோவ்மேன் பவல், ரூதர்போர்டடு, ஆண்ட்ரே ரசல், ஷெபர்ட், ஜேசன் ஹோல்டர் என ஒன்பது விக்கெட்டுகளுமே ஹிட்டிங் பேட்ஸ்மேனாக உள்ளனர். எனவே டி20 உலகக்கோப்பை வரும் பட்சத்தில் அதுவும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க மைதானங்களில் நடைபெற இருக்கும் நிலையில், தனது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் ஆபத்தான அணியாக இருக்கலாம். எனவே மற்ற அணிகள் வெஸ்ட் இண்டீஸ் அணியை எப்படி அணுக போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் ஜாம்பவான் டேரன் சமி 2024 டி20 உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணி தான் வெல்லும் என்று கணித்துள்ளார்.