கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணியானது எட்டு ரன்கள் வித்தியாசத்தில் ஒரு வரலாற்று வெற்றியை பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது அந்த அணியின் வீரர் சமர் ஜோசப். இவர் எடுத்த ஏழு விக்கெட்டுகள் தான் தற்போது யார் இவர் என்பதை பற்றி கிரிக்கெட் வட்டாரத்தையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இந்த போட்டியில் முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 311 ரன்களை குவித்து இருந்தது.
அதற்கு பிறகு களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி ஒன்பது விக்கெட்டுகளை பறிகொடுத்து 289 ரன்களை எடுத்து Follow On செய்தார்கள். அதற்கு பிறகு களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 199 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆஸ்திரேலியாவிற்கு 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என நிர்ணயிக்கப்பட்டது.
எனவே தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர்கள் மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சுகளை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுக்க சமர் ஜோசப்ன் அபார பந்து வீச்சால் 207 கிரிக்கெட்டுகளையும் இழந்து சுருண்டனர். இதனால் வெற்றிக்கு காரணமாக அமைந்த சமர் ஜோசப் வீரரை பல வீரர்களும் புகழ்ந்து தள்ளினார்கள். அப்படி யார் இவர் என்பதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
கயானாவில் உள்ள பக்கார என்ற நீர் சூழ்ந்த கிராமத்தில் எளிய குடும்பத்தின் மூலம் பிறந்தவர் தான் இந்த சமர் ஜோசப் இருபத்தி நான்கு வயது மட்டுமே ஆன இவர் கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்றால் படகில் செல்ல மட்டுமே இரண்டு நாள் ஆகுமாம். சொல்லப்போனால் இவர் பிறந்த கிராமத்தில் சுமார் முன்னூற்றி ஐம்பது பேர் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள்.
அங்கு பிறந்த இந்த ஜோசப் தான் கூலி தொழிலாளியாக வேலை செய்தும் வந்திருக்கிறார். அதற்கு அப்புறம் கடந்த வருடம் 2021 பாதுகாவலராக பன்னிரெண்டு மணி நேரம் வேலை நேரத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். ஒரு சில மாதங்களுக்கு முன்பு கூட கரீபியன் பிரீமியர் லீக் பிரதான பந்துவீச்சாளராக மட்டுமில்லாமல் அல்ல நெட் பவுலராக தனக்கான வாய்ப்புக்காக கண்களில் கனவுகளை தேக்கி வைத்து வலம் வந்தார்.
இவருக்கு வாய்ப்புகள் கூடி வந்தாலும் ஐந்து சிறப்பு போட்டிகளை மட்டுமே ஆடி தனது திறனின் ஆரத்தை அதிகரிப்பதற்கான காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். மேற்கிந்திய தீவுகள் மீது இருந்த கிரிக்கெட் ஆர்வத்தால் முதல் தர போட்டிகளில் விளையாடிய அவர் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணத்தின் முதல் முறையாக அணியில் இடம் பிடித்தார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அறிமுகமான முதல் போட்டியிலே இவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதற்கு அப்புறம் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர் மிச்சர் ஸ்டாக் அவர்களின் அபாரமான ஏற்கர் பந்து சமர் ஜோசப் காலை பதம் பார்த்தது.
ஆனாலும் இவர் தொடர்ந்து விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் திரும்ப வந்து ஆஸ்திரேலியாவை அச்சுறுத்த இரண்டாவது இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை விழ்த்தி ஆஸ்திரேலிய அணியை சுருட்டினார். அனுபவம் மிகுந்த பந்துவீச்சாளர்களுக்கு கூட ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த போட்டியில் சவாலாக இருந்தது. அந்த நிலையில் சமர் ஜோசப் எடுத்த இந்த ஏழு விக்கெட்டுகள் வரலாற்று சிறப்பானதாக மாற்றி இருக்கிறது வரலாற்று சிறப்பானதாக மாற்றி இருக்கிறது. சொல்லப்போனால் பிங்க் நிற பந்து டெஸ்ட் போட்டியில் எந்த அணியிடமும் தோற்றதே இல்லை என்ற நடப்பு டெஸ்ட் சாம்பியன் ஆஸ்திரேலியாவின் சாதனையை இவரும் முறியடித்து இருக்கிறார்.
இந்த சமர் ஜோசப் இன்று இவர் கிரிக்கெட் வீரராக திகழ்ந்ததற்கு காரணம் ஒரு தமிழர் தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? கரீபியன் பிரீமியர் தொடரில் சமர் ஜோசப் சாதாரண வலைப்பந்துவீச்சாளராக மட்டுமே வந்திருக்கிறார். அப்போது அவருடைய பந்து வீச்சை பார்த்து தமிழக கிரிக்கெட் வல்லுனர் பிரசன்னா அசந்து போய் உடனே அவரை அழைத்து நீ யார் என்று கேட்க அவரும் நான் ஒரு வணிக வளாகத்தில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
பின் தினமும் இங்கு வந்து ஒரு மணி நேரம் பந்து வீசினால் கூடுதலாக பணம் கிடைக்கும், அதனால் தான் வந்தேன் என்று கூறியிருக்கிறார். உடனே சரி நான் சொல்வது போல் ஐந்து பந்துகளை வீசி காட்டு அப்படி என்று பிரசன்னா கூறியிருக்கிறார். உடனே சமர் ஜோசப் வீசிய ஐந்து பந்துகளும் பேட்ஸ்மேனை கதிகலங்க வைத்திருக்கிறது. இதை பார்த்ததும் உடனே Guyana Amazon Warriors அணி கேப்டன் இம்ரான் தாகீர் அவரை அழைத்து நீங்கள் என்ன செய்வீர்கள் என்று எனக்கு தெரியாது, நாளைக்கு விளையாடப் போகும் 11 வீரர்களின் பட்டியலில் இந்த நெட் பவுலர் விளையாட வேண்டும் அப்படி என்று பிரசன்னா கூறியிருக்கிறார். அதற்கு இம்ரான் தாகிரும் பிரசன்னாவை மேலும் கீழும் பார்த்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். இதற்கு பிரசன்னா என் மீது நம்பிக்கை, இருந்தால் இந்த பையன் நாளைக்கு விளையாடவேண்டும் அப்படி என்று கூறியிருக்கிறார். இந்த இடைப்பட்ட நேரத்தில் இப்ரான் தாஹிர், பிரசன்னா ஆகியோர் அணியின் உரிமையாளர் தொடர்பு கொண்டு சமா ஜோசப் Gyana அணிக்கு விளையாடுவதற்கான ஒப்பந்தத்தை வாங்கி கொடுத்திருக்கிறார்கள். இந்த ஒப்பந்தத்தை வாங்கியவுடன் சமா ஜோசப் அவர்களின் கண்களில் கண்ணீர் கொட்டி இருக்கிறது.
தமிழர் பிரசன்னாவின் தலையீட்டில் தான் இன்று சமர் ஜோசப் என்ற ஒரு உலக தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு கிடைத்திருக்கிறார்.