நவம்பர் 19 அன்று நடந்த உலககோப்பை இறுதி போட்டி தோல்வியை இன்னும். இந்த தோல்வியின் சோகம் முகமது ஷமியின் முகத்தில் தெளிவாக தெரிகிறது. இன்றும் நான் எங்கு சென்றாலும் இது தான் கேட்கப்படுகிறது என்கிறார் ஷமி. உலககோப்பை தோல்விக்கு பிறகு, டிரஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது பற்றியும் முகமது ஷமி பேசியுள்ளார்.
தொடக்கத்தில் நாங்கள் 3 விக்கெட்டுகளை, இன்னும் ஒரு விக்கெட் கிடைத்து இருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும் என்று தோன்றுகிறது. மேலும் சுழற்பந்து வீச்சாளர்கள் ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தால் ஆட்டம் மீண்டும் எங்கள் கையில் வந்திருக்கும்.
மேலும் அவர் கூறியதாவது, இது அதிர்ஷ்டத்தின் விஷயம். நீங்கள் கடினாமாக உழைக்கலாம் , கொடுப்பவர் மேலே இருக்கிறார் என்று சொன்னதும் ஷமி பேச்சை நிறுத்தினார்.
டிரஸ்ஸிங் ரூமில் பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து
உலககோப்பை தோல்விக்கு பிறகு இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமில் பிரதமர் மோடியை சந்தித்த போது என்னால் அவருக்கு சத்தமாக நன்றியை கூட சொல்ல முடியவில்லை. அந்த நேரத்தில் இதயம் உடைந்தது இரண்டு மாத உழைப்பு ஒரே நாளில் வீணானது.
பிரதமர் மோடி வந்தது எங்களுக்கு ஆச்சர்யம், ஏனென்றால் அவர் வருவதாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவே அவர் வருகையால் நாங்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தோம். ஒவ்வொரு வீரரிடமும் அவர் பேசும் போது நிறைய விஷயங்கள் மாறியுள்ளதாக கூறனார்.
One thought on “உலககோப்பை தோல்விக்கு பிறகு, டிரஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது என்று முகமது ஷமி கூறியுள்ளார்.”